இந்தியா

சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

webteam

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 

அவரது பிறந்த நாளான இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்திரா காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதத்திற்கு "நீதிக்கான போராட்டம்" என பெயரிடப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையை சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துகின்றனர். மற்ற அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்து தனது தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்பப் பெற்றார். இந்நிலையில் தனது பிறந்த நாளான இன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார்.