மைசூர் தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் ’துரோணா’ யானை திடீரென உயிரிழந்தது.
மைசூர் தசரா விழா பிரபலமான ஒன்று. இங்க ஜம்போ ஊர்வலமும் பிரமாண்டமாக நடைபெறும். இதில் துரோணா என்ற 39 வயது யானை தங்க அம்பாரியை, சுமந்து செல்வது வழக்கம். இந்த யானை, கர்நாடக மாநிலம் நாகரஹோல் தேசிய பூங்காவில், தித்திமதி யானைகள் முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டது.
2.69 மீட்டர் உயரமும் 3,900 கிலோ எடையும் கொண்ட இந்த யானை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் நேற்று தண்ணீர் குடிக்கச் சென்றது. அப்போது திடீரெனச் சரிந்து விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தது.
அந்த யானை ஏற்கனவே சோர்வாக இருந்தது என்றும் மாரடைப்பு காரணமாக அது உயிரிழந்திருக்கலாம் என்றும் யானை கள் முகாமைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் யானையின் உடற்கூராய்வு அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.