இந்தியா

கிரிக்கெட் வீரரைத் தாக்கிய மர்ம கும்பல்

கிரிக்கெட் வீரரைத் தாக்கிய மர்ம கும்பல்

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்திய கிரிக்கெட் வீரர் பர்வீர்ந்தர் அவனா, 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். 

டெல்லியைச் சேர்ந்த பர்வீந்தர் அவானா, ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ல் நடந்த டி20 தொடரிலும் இந்திய அணிக்கா அவானா விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், நொய்டாவின் கஸ்னா பகுதியில் அவானாவை வழிமறித்துத் தாக்கிய மர்ம கும்பல், அவரது காரையும் கடுமையாக சேதப்படுத்தியது. இதுதொடர்பாக அவானா அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கொல்கத்தாவில் பார்க்கிங் தகராறு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.