சட்டவிரோத கருக்கலைப்பு
சட்டவிரோத கருக்கலைப்பு புதிய தலைமுறை
இந்தியா

சட்டவிரோத கருக்கலைப்புக்கு எதிராக களமிறங்கிய மைசூரு மாவட்ட சுகாதாரத்துறை

PT WEB

கர்நாடக மாநிலம் மைசூர் மருத்துவமனை ஒன்றில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மைசூரு சுகாதாரத்துறை அதிகாரி குமாரசாமி, ” கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பது, கருக்கொலை இரண்டுமே தண்டனைக்குரிய குற்றம். இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் மருத்துவமனைகள், ஸ்கேனிங் சென்டர்களில் சிசுக்களின் பாலினத்தை கண்டறிவது, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது தெரிந்தால், சுகாதாரத்துறையில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். 50,000 ரூபாய் வெகுமதி அளிப்பதுடன் தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.