உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் அங்கமாக மைசூரில் இன்று நடைபெறும் யானைகள் ஊர்வலத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்று மைசூர் தசரா திருவிழா. விழாவின் போது மைசூர் அரண்மனையில் இருந்து 5கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டபம் வரை யானைகள் ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். இந்த நிகழ்வை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். தசரா விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மணை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவில் ஒளிவிளக்குகளால் பிரம்மாண்டமாக காட்சியளித்த அரண்மனையை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.