உத்தவ், ஏக்நாத் எக்ஸ் தளம்
இந்தியா

ரகசிய கேமராக்களால் வீழ்த்தப்பட்ட சிவசேனா.. அதிர்ச்சியை கிளப்பிய `சாம்னா’!

ஹனி ட்ராப், ரகசிய கேமராக்கள் மற்றும் பெகாசஸ் போன்ற உளவு அமைப்புகளால் சிவசேனா கட்சியின் எம்பி, எம்.எல்.ஏக்கள் வீழ்த்தப்பட்டதாக, உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் வெளியிட்டுள்ளது.

PT WEB

ஹனி ட்ராப், ரகசிய கேமராக்கள் மற்றும் பெகாசஸ் போன்ற உளவு அமைப்புகளால் சிவசேனா கட்சியின் எம்பி, எம்.எல்.ஏக்கள் வீழ்த்தப்பட்டதாக, உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் வெளியிட்டுள்ளது. பெண்களை வைத்து வீழ்த்தும் `ஹனி ட்ராப்’ மூலம் வீழ்த்தப்பட்ட சிவசேனா எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவ் ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகே எம். எல்.ஏக்கள் மிரட்டப்பட்டு சிவசேனா கட்சி உடைந்ததாகவும் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

குறிப்பாக, கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 4 எம்.பி.க்கள் தங்களின் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க.வில் இணையுமாறு மிரட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, கடந்த 2022ஆம் ஆண்டு சிவசேனா கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு, மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.