தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற கட்சிகள் தமக்கு வாக்களிக்காதவர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேசிய அவர் இந்திய மக்களவை தேர்தல்களில் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வென்றிருந்த போதும் எந்த ஒரு கட்சியும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றதில்லை என கூறினார். இதன் மூலம் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் நலனையும் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் மறைமுகமாக கூறுகின்றனர் என்றார் பிரணாப் முகர்ஜி.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியின் கருத்து வெளியாகியுள்ளது.