இந்தியா

பாபர் மசூதி வழக்கு : மதகுரு மவுலானா கல்பே கருத்து

பாபர் மசூதி வழக்கு : மதகுரு மவுலானா கல்பே கருத்து

webteam

பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வராவிட்டாலும், அதனை அவர்கள் அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷியா பிரிவு மதகுரு மவுலானா கல்பே சாதிக் வலியுறுத்தியுள்ளார்.

உலக அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற தலைப்பில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஷியா பிரிவு மதகுரு மவுலானா கல்பே சாதிக், ஒருவேளை பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் கூட, ராமஜென்மபூமி நிலத்தை மகிழ்ச்சியுடன் இந்துக்களிடம் ஒப்படைத்துவிட முன்வர வேண்டும். முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வராவிட்டாலும், அதனை அவர்கள் அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதே நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மவுலானா சாதிக் தனது பேச்சின் மூலம் அனைவரது மனங்களையும் வென்றுவிட்டதாக பாராட்டினார். ராமபிரான் இந்துக்களின் ஆன்மா அல்ல என்றும், அவர் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆன்மா எனவும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.