உத்தரபிரதேசம் முகநூல்
இந்தியா

ஹிஜாப்பை கழற்றினால்தான் தேர்வு எழுத அனுமதி... உபியில் நடந்த சம்பவம்!

ஹிஜாப் விவகாரம்: உபியில் 4 முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரபிரதேசத்தில் ஹிஜாப் அணிந்திருந்ததற்காக நான்கு முஸ்லிம் மாணவிகள் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மொராதாபாத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு ஹிஜாப் அணிந்து 4 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றதாக தெரிகிறது. அப்போது, மாணவிகளின் அடையாளங்களை அறிந்துகொள்ள ஹிஜாப்பை கழற்றுமாறு ஆசிரியர் கூறியுள்ளார். ஹிஜாப்பை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் இல்லையெனில் உள்ளே நுழையக்கூட அனுமதி கொடுக்கப்படாது என்று கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த மாணவிகள், தேர்வை தவறவிட்டாலும் பரவாயில்லை ஹிஜாப்பை கழற்ற மாட்டோம் என கூறியுள்ளனர். இதனை அடுத்து, பெண் ஆசிரியர் ஒருவரின் மூலம், மாணவிகளின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.