இந்தியா

தூய்மைப் பணியாளரை தரக் குறைவாக நடத்திய வீட்டு உரிமையாளர் (வீடியோ)

தூய்மைப் பணியாளரை தரக் குறைவாக நடத்திய வீட்டு உரிமையாளர் (வீடியோ)

PT

தூய்மைப் பணியாளர்களை வீட்டு உரிமையாளர் ஒருவர் தரக்குறைவாக நடத்துவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் முன்னணி கள வீரர்களில் மிக முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்களும், காவலர்களும் தங்களது உயிரை பணயம் வைத்து எப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதேபோலத்தான் தூய்மைப் பணியாளர்களும் மக்களை காக்க இரவு பகல் பாராமால் உழைத்து வருகின்றனர்.

ஆனால் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்கள் சில நேரங்களில் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு அவ்வப்போது எழுவது உண்டு. இந்நிலையில், குப்பைகளை அள்ள வரும் இவர்களை, கொரோனா பெயரைச் சொல்லி மக்கள் நடத்தும் விதம் மிகவும் வேதனைக்குரியதாக அமைந்திருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தூய்மைப் பணியாளர் ஒருவர் ஒரு வீட்டு உரிமையாளரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பதாக தெரிகிறது. அதற்கு அந்த வீட்டு உரிமையாளர் அவரை தள்ளி நிற்கும் படி கூறுகிறார். உடனே அவர் அவரை வீட்டு தள்ளிச் செல்கிறார். ஆனால் மேலும் தள்ளி நிற்கும்படி அதட்டிய அந்த வீட்டு உரிமையாளர் தண்ணீர் பாட்டிலை பணியாளர்களின் கைகளில் கூட கொடுக்காமல் நடுரோட்டில் வைத்து விட்டு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறிவிட்டு “கொரோனா பரவுது ”என்று வீட்டிற்குள் செல்கிறார்.” இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.