இந்தியா

”மூணாறு நிலச்சரிவு உயிரிழப்புகளுக்கு தேயிலை எஸ்டேட் நிர்வாகமே காரணம்” - விசாரணை குழு.

kaleelrahman

மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக உயிர் இழப்பிற்கு, தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். இவர்கள் வசித்த 30 வீடுகள், 32 கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை மண்ணில் புதைந்தன.


இந்த துயரச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை இடுக்கி மாவட்ட ஆட்சியர் அமைத்து இருந்தார்- இந்த விசாரணைக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர் களிடமும், உடைமைகளை இழந்தவர்களிடமும், தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தி, விசாரணையின் அறிக்கையை ஆட்சியரிடம் வழங்கியது.

இந்த சம்பவம் நடந்து 10 மணி நேரத்திற்கு பின்னரே தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு அளித்ததே மிகப்பெரிய கோர சம்பவத்திற்கு காரணம் என்றும், மண் இறுக்கம் இல்லாத பகுதியில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் வீடுகட்டி கொடுத்ததும் இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


விசாரணைக்குழு அளித்த அறிக்கையை அரசிடம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்ததை அடுத்து பேரிடர் மேலாண்மை வாரிய ஆணையர் தலைமையில் குழு அமைத்து இந்த அறிக்கை மீதான விசாரணையை நடத்த கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் உத்திரவிட்டுள்ளார்