செக் மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முன்னா பட்டேலுக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முன்னா பட்டேல். 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடிய முன்னா படேல், இப்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை.
படேல், நிவாஸ் புரமோட்டர்ஸ் என்று நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிறுவனம் டெல்லியை சேர்ந்த அகர்வால் என்பவருக்கு ரூ.25.5 லட்சத்துக்கான காசோலை ஒன்றை வழங்கியுள்ளது. அந்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து அகர்வால் நிறுவன இயக்குனர்களிடம் பேசினார். சரியான பதில் சொல்லவில்லையாம். இதையடுத்து டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி ஸ்னிக்தா சர்வாரியா, படேல் உட்பட அந்நிறுவன இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.