ரயில் விபத்து புதியதலைமுறை
இந்தியா

தீப்பிடித்துவிட்டதாக வதந்தி.. ரயிலிலிருந்து குதித்தவர்கள் மற்றொரு ரயிலில் மோதி விபத்து - 10 பேர் பலி

மகராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலிலிருந்து புகை வருவதை பார்த்து அச்சமைடைந்துள்ளனர். இதனால் ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி, தப்பிக்க முயன்றிருக்கின்றனர்

PT WEB

மும்பையில், ஜல்காவ் மாவட்டத்தில் புஷ்பக் ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலிலிருந்து புகை வருவதை பார்த்து அச்சமைடைந்துள்ளனர். அத்துடன் தீப்பிடித்துவிட்டதாக வதந்தியும் பரவியுள்ளது. இதனால் ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி, தப்பிக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் எதிர்புறம் இருந்து வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சுமார் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளனர்.