மும்பையில் இரண்டு மோனோ ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள செம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த மோனோ ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அதே தடத்தில் மற்றொரு மோனோ ரயில் எதிரே வந்ததால் பயணிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். உடனடியாக, அந்த ரயில் ஓட்டுனர் பாதியிலேயே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். திடீர் மின்தடை காரணமாக மோனோ ரயில் பாதியில் நின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.