மும்பையில் அதிக மழைப்பொழிவு web
இந்தியா

மும்பையில் 35 ஆண்டுகளில் அதிகப்படியான மழைபொழிவு!

மும்பையில் 35 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிகப்படியான மழைபொழிவு பதிவாகியுள்ளது.

PT WEB

மும்பையில் 35 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிகப்படியான மழைபொழிவு பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 118 செ.மீ. மழைப்பொழிவு பதிவான நிலையில் 4 நாட்களில் மட்டும் 82 செ.மீ., மழைப்பதிவு பதிவாகியுள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், கடந்த 35 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவு மழைப்பதிவாகி உள்ளது.

கடந்த மாதம் மொத்தமாக 118 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. இதில், ஆகஸ்ட் 15 முதல் 19 வரையிலான நாட்களில் மட்டும், 82 சென்டி மீட்டர் மழைப் பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

35 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 124 செண்டி மீட்டர் மழைப் பதிவான நிலையில், தற்போது அதற்கு அடுத்த அதிக அளவாக 118 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.