இந்தியா

கனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு !

கனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு !

webteam

மும்பையில் இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமா‌க மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வறட்சி காரண‌மாக தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் ஒரே நாளில் 91.9 மில்லிமிட்டர் மழை பெய்துள்ளது. மும்பை நகரின் பல பகுதிகளில் வழக்கம் போல தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை ஸ்தம்பித்துள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கனமழை காரணமாக பிம்பிரிபாதா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 15 வயது சிறுமி உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் படையினர் போராடியும் இடிபாடுகளை அகற்ற 12 மணி நேரமானதால் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் வெள்ள நீரால் சூழப்பட்டும், இடிபாடிகளில் சிக்கியும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.