இந்தியா

ரயிலில் சிக்கிய 700 பயணிகள் பத்திரமாக மீட்பு - உள்துறை அமைச்சகம்

rajakannan

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தின் நடுவே  ரயிலில் சிக்கியிருந்த 700 பயணிகள் மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் சாலைகள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், மும்பை - கோலாப்பூர், மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில், மழை வெள்ளம் அதிகமாக சூழந்துள்ள பட்லாபூர், வங்கானி பகுதியில் சிக்கியது. இந்த ரயிலில் 700-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர்.

அவர்களை பத்திரமாக மீட்க, ரயில்வே நிர்வாகமும் மகாராஷ்டிர அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. தேவைப்பட்டால், பயணிகளை விமானம் மூலம் மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரயிலில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தின் நடுவே  ரயிலில் சிக்கியிருந்த 700 பயணிகளையும் மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டவர்களை அழைத்துவர 19 பெட்டிகள் கொண்ட ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.