இந்தியா

கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றச் செவிலியை பணிக்குத் திரும்பிய மும்பை மேயர் 

கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றச் செவிலியை பணிக்குத் திரும்பிய மும்பை மேயர் 

webteam
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மும்பை மேயரான கிஷோரி, செவிலியர் பணியை மேற்கொண்டுள்ளார். 
 
மும்பை மேயராக பதவி வகிப்பவர் கிஷோரி பெட்னேகர்.  இவர் ஒரு செவிலியை. அரசியலுக்கு வந்த பிறகு அந்தப் பணியை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். ஆனால் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மும்பை மாநகரம் அதிக நோயாளிகளைப் பெற்றுள்ளது. ஆகவே இந்தத் தர்மசங்கடமான தருணத்தில் தனது பங்களிப்பைச் செய்வதற்காகச் செவிலியைச் சீருடையை அணிந்துகொண்டு இன்று காலை பிரஹன்மும்பை மாநகராட்சியில் உள்ள பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனைக்கு மேயர் கிஷோரி பெட்னேகர் வருகை தந்தார். அவரது செயல் அரசியல் கடந்து பலரையும் ஈர்த்துள்ளது.
 
அப்போது அவர், மருத்துவமனையில் உள்ள செவிலியைகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் தொற்றுநோயைக் கையாளும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி விசாரித்தார். இது குறித்து பி.எம்.சி மருத்துவமனை அதிகாரி ஒருவர், பெட்னேகர் தங்களது மருத்துவமனைக்கு வந்தபோது சமூக இடைவெளியை மற்றும் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தார்.
 
 
இது கிஷோரி பெட்னேகர்“நான் ஒரு காலத்தில் செவிலியராகப்  பணிபுரிந்தேன். தொழில்முறையாக உள்ள சவால்களை நான் நன்கு அறிவேன். நான் அவர்களில் ஒருத்தி என்பதை செவிலியை சகோதரிகளுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்க எனது சீருடையை அணிந்துள்ளேன். தொற்று நோய்க்கு எதிரான அவர்களின் வீரம் நிறைந்த போராட்டத்தில் அவர்களை ஊக்குவிப்பதற்காக நான் நர்சிங் ஊழியர்களுடன் உரையாடினேன். இவை கடினமான காலங்கள். இந்த தொற்று நோயை ஒன்றாக சேர்ந்து எதிர்த்துப் போராட நாங்கள் ஒருவருக்கொருவர் முன் நிற்க வேண்டும் ”என்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்திக்குப் பேட்டி அளித்துள்ளார்.
 
 
மில் தொழிலாளி ஒருவருக்கு மகளாகப்  பிறந்த பெட்னேகர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு செவிலியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1992  ஆண்டு சிவசேனாவின் மகளிர் அணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில், மேற்கு மகாராஷ்டிராவின் ராய்காட் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் சேனாவுக்காகக் கட்சி பணியாற்றினார். அவர் 2002 இல் பிஎம்சி பகுதிக்கு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.