இந்தியா

ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்... கிடைத்ததோ `ரெட்மி நோட் 10’ - இன்ப அதிர்ச்சியில் மும்பைவாசி!

JustinDurai

அமேசான் தளத்தில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த  வாடிக்கையாளருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர், அமேசான் தளத்தில் ரூ. 396 மதிப்புள்ள  கோல்கேட் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள 'ரெட்மி நோட் 10' ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் இன்ப அதிர்ச்சிக்குள்ளானர்.

தவறுதலாக வந்த ஆர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் செய்யும் ஆப்ஷன் கிடையாது. இதையடுத்து அவர் இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.