ஹோட்டல்களில் தீ விபத்தின் போது அதனை அணைக்க மணலுக்குப் பதிலாக மைதா மாவை பயன்படுத்த மும்பை உணவு விடுதிகள் அனுமதி கோரியுள்ளன.
மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் கடந்த டிசம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என உணவு விடுதிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தீத் தடுப்பு விதிகளின்படி மணல் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஹோட்டல்களில் உள்ள சமையல் அறைகளில் மணல் வைத்திருப்பது உணவுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணானது என பல்வேறு ஹோட்டல் நிர்வாகங்கள் கூறி வருகின்றன. எனவே தீயை அணைக்க மணலுக்குப் பதிலாக மைதா மாவை பயன்படுத்த அனுமதி கோரி, மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு இந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பழைய முறையை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், மாற்று ஏற்பாடாக மணலுக்கு பதில் மைதா மாவை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.