இந்தியா

மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

rajakannan

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இடிபாடுகளில் ஏராளாமானோர் சிக்கினர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான நடைமேம்பாலம் ரயில் நிலையத்தையும், அசாத் மைதான காவல் நிலையத்தையும் இணைக்கிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.