Mumbai Shocker: Couple Assaulted by Group of Boys While Taking Photos at Public Park AI
இந்தியா

புகைப்படம் எடுத்த ஜோடி மீது தாக்குதல்! கம்புகளால் தாக்கி துரத்திய சிறுவர்கள்! வைரலான சம்பவம்!

மும்பையில் உள்ள பூங்காவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த காதலர்களை 8 முதல் 10 சிறுவர்கள் ஆபாசமாகப் பேசியும், கம்புகளால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

PT WEB

மும்பை பூங்காவில் புகைப்படம் எடுத்த காதலர்களை சிறுவர்கள் குழு கம்புகளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில், 8 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

செய்தியாளர்: துர்கா தேவோ சரவணன்

மும்பையில் உள்ள பொதுப் பூங்காவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த காதலர்களிடம் 8 முதல் 10 பேர் கொண்ட சிறுவர்கள் குழு ஆபாசமான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த ஜோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், இருவரையும் கம்புகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

Mumbai Couple Assault Case: 8 Minor Boys Detained After Viral Video

மேலும், படிக்கட்டுகளில் இறங்கி ஓடிய காதலர்களைச் சிறிது தூரம் துரத்திச் சென்றும் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, மும்பை குர்லாவில் உள்ள ஃபீனிக்ஸ் மால் அருகே அமைந்துள்ள பூங்காவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் அளித்த புகாரின் அடிப்படையில், 8 சிறுவர்களைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காகச் சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.