இந்தியா

நாயை காப்பாற்றப் போய் கடலில் முழ்கிய தொழிலதிபர்

webteam

கடலில் தத்தளித்த நாயை காப்பாற்றச் சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி பலியானார்.

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் நிதின் ஷெனாய் (வயது 41). ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பிசினஸ் தொடர்பாக அடிக்கடி துபாய் சென்று வருவார் நிதின். கடந்த மாதமும் துபாய் சென்றார். பாம் ஜுமைரா பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த அவர், பிசினஸ் மீட்டிங்கை முடித்துவிட்டு கடற்கரையோரம் நடந்து சென்றார். அப்போது அவர் தோழி ஒருவரின் நாய் ஒன்று கடலுக்குள் சிக்கி தத்தளித்தது. அதைக் காப்பாற்றுமாறு கூறினார் தோழி. இதையடுத்து நாயை காப்பாற்ற கடலுக்குள் விழுந்த நிதின் அதற்குப் பிறகு சடலமாகத்தான் வெளியே வந்தார்.

‘நிதினுக்கு நாய்கள் பிடிக்கும். ஆனால் நீச்சல் குளத்தில் மட்டுமே அவருக்கு நீச்சலடிக்கத் தெரியும். கடலுக்குள் நீந்த தெரியாது. இருந்தாலும் நாய்க்காக கடலுக்குள் விழுந்து உயிரை விட்டிருக்கிறார். அவரில்லாமல் எப்படி வாழப் போகிறோனோ?’ என்று கண்ணீர் விடுகிறார் அவர் மனைவி சுரபி. துபாய் போலீசார் விசாரணை நடத்தி நிதினின் உடலை ஒப்படைத்துள்ளனர்.