இந்தியா

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

rajakannan

தெற்கு மும்பையின் ஜேஜே மருத்துவமனை அருகே அமைந்திருந்த இந்த கட்டடத்தில் 12 அறைகளும், கீழ் தளத்தில் ஆறு கிடங்குகளும் செயல்பட்டு வந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேசிய பேரிடர் சமாளிப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மும்பை மாநகராட்சி விதிமுறையின் கீழ் இந்த கட்டடம் ஆபத்தான கட்டுமானங்கள் பட்டியலில் இருந்ததா? அல்லது மழை காரணமாக இடிந்து விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்டட விபத்தில் ஏதேனும் தவறுகள் நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மும்பை கட்டட விபத்து சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மும்பை கட்டட விபத்து கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.