2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 ரயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது ரயில் நிலையத்தில் உள்ளவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ குறைந்த செலவில் மருத்துவ சேவை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என்ற திட்டம் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படும் எனவும் சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25, இசிஜி எடுக்க ரூ.50 வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.