இந்தியா

மும்பை தாராவியில் திடீர் தீ

மும்பை தாராவியில் திடீர் தீ

webteam

மும்பையில் உள்ள தாராவியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் எரிந்தன.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி தாராவி. சமீபத்தில் வெளியாகியுள்ள ரஜினிகாந்தின் காலா படம் கூட தாராவி பகுதியை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ ரஜினிகாந்த், அங்கு வசிப்பவராகவே நடித்துள்ளார். ஏராளமான குடிசைப் பகுதிகளை கொண்ட இங்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள 90 அடி சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ, அருகிலுள்ள குடிசை பகுதிகளுக்கும் பரவியது. 



உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. ‘தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அணைக்கப்பட வேண்டும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து சேதம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.