இந்தியா

138 அடியை தாண்டிய முல்லை பெரியாறு அணை

138 அடியை தாண்டிய முல்லை பெரியாறு அணை

கலிலுல்லா

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138அடியை தாண்டியதால், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இரண்டம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான, குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 138 அடியைத் தாண்டியதால், இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு இது குறித்த கடிதம், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 3,522 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து 2,300கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டினால், உபரி நீர் கேரளாவிற்கு திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.