முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு தாக்கல் செய்துள்ளது.
அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதி கோரி தமிழக அரசு மனு செய்துள்ள நிலையில் கேரளா பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதில் வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு சாலையில் அணைப் பாதுகாப்பு பொருட்களை எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரும் தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேரளா கோரியுள்ளது.