இந்தியா

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பற்றிய வழக்கு - 4 வாரம் அவகாசம் கோரும் கேரளா 

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பற்றிய வழக்கு - 4 வாரம் அவகாசம் கோரும் கேரளா 

Veeramani

முல்லைப்பெரியாறு அணையின் இயக்கம், செயல்பாடு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கைக்கு பதில் அளிக்க கேரள அரசு 4 வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு, வரும் 26ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரி கடிதம் அளித்துள்ளார். கேரள அரசின் அணை தொடர்பான தரவுகள் தவறானவை என மத்திய அரசு கூறியிருந்ததோடு, அணை இயக்கம், பராமரிப்பு, செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு தயாரித்து அளித்த RULE CURVE எனப்படும் செயல்பாட்டு விதிமுறை அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும், அணையின் உறுதித்தன்மை குறித்த கேள்விக்கே இனி இடமில்லை எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.