இந்தியா

எக்காரணம் கொண்டும் கட்சியை உடைய விட மாட்டேன்.. முலாயம் சிங் யாதவ்

எக்காரணம் கொண்டும் கட்சியை உடைய விட மாட்டேன்.. முலாயம் சிங் யாதவ்

Rasus

சமாஜ்வாதி கட்சியை எக்காரணம் கொண்டும் உடைய விட மாட்டேன் என முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் முலாயம் சிங் மிக உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதலமைச்சர் என அறிவித்த பின்பும் ஒரு புதிய கட்சிக்கு அவசியம் என்ன..? இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும்..? என வினா எழுப்பினார்.

ஒரு நபர் கட்சியை பிளவுபடுத்த முயல்வதாக ராம் கோபால் யாதவை மறைமுகமாக விமர்ச்சித்த முலாயம் சிங், ஆனால் எக்காரணம் கொண்டும் கட்சியை உடைய விட மாட்டேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். கட்சி இரண்டாக உடைவதை தடுப்பதற்காகவே தான் டெல்லி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இருதரப்பினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.