உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இன்று புதிய கட்சி தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக மகன் அகிலேஷுடன் முலாயமுக்கு கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த தேர்தலில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தன. இந்நிலையில் கட்சியின் அதிகாரம் அகிலேஷ் வசம் வந்தது. இதையடுத்து ஏற்பட்ட முலாயம் தனிக்கட்சி காண உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. லோக்தள கட்சியுடன் இணைந்து புதிய கட்சி உருவாகும் என்று தெரிகிறது.