இந்தியா

முகேஷ் அம்பானியின் ஓராண்டு சம்பளம் இவ்வளவா?

முகேஷ் அம்பானியின் ஓராண்டு சம்பளம் இவ்வளவா?

webteam

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, கடந்த 2008-09 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ரூ.15 கோடியை தனது ஆண்டு ஊதியமாக பெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பணக்கார மனிதராக அறியப்படும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.38.75 கோடி வரை வழங்கலாம் என்று நிறுவனத்தின் விதி அனுமதித்துள்ளது. இருப்பினும், கடந்த 2008-09 ஆண்டு முதல் முகேஷ் அம்பானி, தனது ஆண்டு ஊதியமாக ரூ.15 கோடி பெற்று வருவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வழங்கப்படும் பயணம் உள்ளிட்ட மற்ற சலுகைகளையும் சேர்த்தால் ஆண்டுக்கு ரூ.24 கோடி என்ற அளவினை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கடந்த 2009ல் விவாதம் எழுந்தபோது, ஆண்டு ஊதியம் ரூ.15 கோடி என்ற அளவினை அவரே நிர்ணயித்துக் கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.