இந்தியா

இணையத்தில் வைரலாகும் தோனி மகள் போட்டோ!

இணையத்தில் வைரலாகும் தோனி மகள் போட்டோ!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி- சாக்‌ஷி தம்பதியின் மகள் ஜிவா. சமுக வலைத்தளங்களில் ஜிவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மலையாளப் பாடலை அப்படியே அச்சுப்பிசகாமல் பாடியது, மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லியது, அப்பாவுடன் சப்பாத்தி உருட்டியது  என ஜிவாவின் வீடியோக்கள் இணையதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் தோனி மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த கியூட் படம் வைரலாகியுள்ளது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது இந்தப் புகைப்படம்.