இந்தியா

பாஜக எம்.பி. கிர்ரான் கெர் ரத்த புற்றுநோயால் பாதிப்பு!

JustinDurai

சண்டிகர் தொகுதி பாஜக எம்.பி. கிர்ரான் கெர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

சண்டிகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கிர்ரான் கெர். இந்தி திரைப்பட நடிகையான இவர், பாஜக சார்பில் சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது 68 வயதான கிர்ரான் கெர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சண்டிகர் பாஜக தலைவர் அருண் சூத் கூறுகையில், ‘’கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி தனது சண்டிகரில் உள்ள கிர்ரான் கெரின் வீட்டில் அவரது இடது கை உடைந்திருந்தது. இதையடுத்து சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு ‘மல்டிபிள் மைலோமா’ எனப்படும் ஒரு வகையான ரத்தப் புற்றுநோய்  இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கேன்சர் அவரது இடது கை மற்றும் வலது தோள்பட்டையில் பரவியது. இதையடுத்து மும்பையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக குறைந்து மீண்டு வருகிறார்’’ என்றார்.