இந்தியா

மதரஸாக்களில் தினமும் தேசிய கீதம்: ம.பி. அமைச்சர் பேச்சு

rajakannan

மதரஸாக்களில் தினமும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய பிரதேச பள்ளி கல்வி துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தின் போது மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகளை சான்றுக்காக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த உத்தரவு மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் விஜய் ஷா, ’மதரஸாக்களில் தினமும் தேசிய கொடி ஏற்ற வேண்டும், தேசிய கீதம் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் இருக்கக் கூடும் என்று நினைக்கவில்லை’ என்றார்.

மேலும் மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜய் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.