ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி 2ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை பட்டதாரி பெண் ஒருவர் தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான மகேஸ்வரி, பாரம்பரிய நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கையை பெருக்க ஜல்லிக்கட்டு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள காந்தி திடலில் இருந்து மகேஸ்வரி தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். கும்பகோணம், தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக மீண்டும் புதுச்சேரியில் மகேஸ்வரி தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.