மகளின் கல்விக்காக பணமில்லாமல் தவித்த மஹாராஷ்டிரா பீட் நகரைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், சேலையுடன் வெறுங்காலில் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்து ரூ.3,000 பரிசுத் தொகை வென்றார். மகளுக்குப் புத்தகங்கள் வாங்க இந்தத் தொகையை பயன்படுத்திய தாயின் தியாகம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியூட்டும் கதையாக வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தாய், தனது மகளின் கல்விச் செலவுக்காகக் காலணி இல்லாமல் ஓடிப் போட்டியில் வென்று அசத்தியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் பீட் நகரை சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற 47 வயது தாய், அரசுத் தேர்வுக்குப் படிக்கும் தன் மகளுக்குப் புத்தகங்கள் வாங்கப் பணமில்லாமல் தவித்தார். அப்போது அந்த பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சேலையுடன் வெறுங்காலுடன் ஓடி முதலிடம் பிடித்தார். அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது. ஒருவாரத்திற்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவம் இன்றுவரை வைரலாக பகிரப்பட்டு வருகிறது..
தாயின் இந்த நெகிழ்ச்சியானத் தியாகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.