இந்தியா

பெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்

பெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்

Rasus

பெற்ற பிள்ளையை தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கபஷேரா பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் தனது கணவரான சூர்ய பிரதாப் சிங்கை பிரிந்து கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறார். இவர்களுக்கு யுவான் சிங் என்ற மகன் உண்டு. யுவான் சிங் ராணியின் வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார். இதனிடையே நரேந்திர குமார் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர குமாரும் ராணியின் வீட்டிலேயே தங்கியதாக தெரிகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் சிறுவன் யுவான் சிங் வீட்டு கழிவறையில் கீழே விழுந்து மயக்கம் அடைந்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் யுவான் சிங்கின் தந்தையான சூர்ய பிரதாப், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனிடையே சிறுவனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவனின் உடலில் பல காயங்கள் இருந்ததும், அடித்தது கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராணி, நரேந்திர குமார் ஆகியார் இணைந்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்யதுள்ளனர். சிறுவனின் தலையை பலமுறை சுவற்றில் மோதச் செய்த அவர்கள் அதன்மூலம் சிறுவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.