அரியானா மாநிலத்தில் சேலையை எடுப்பதற்காக பெண் ஒருவர் தனது மகனை பத்தாவது மாடியில் இருந்து கீழே இறக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத் நகரில் அடுக்குமாடி ஒன்றில் பத்தாவது மாடியில் வசிக்கும் பெண்ணின் சேலை, 9ஆவது மாடியில் உள்ள பால்கனியில் விழுந்துள்ளது. அந்த வீடு பூட்டியிருந்ததால், அங்கு விழுந்த சேலையை எடுப்பதற்காக அந்த பெண், தனது மகனை போர்வை ஒன்றால் கட்டி கீழே இறக்கி உள்ளார். அந்த சிறுவனும் ஒன்பதாவது மாடியில் இறங்கி சேலையை எடுத்துள்ளான்.
பின்னர் அந்த சிறுவனை அவனது உறவினர்கள் மேலே தூக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு சேலைக்காக மகனின் உயிரை பணயம் வைத்து இது போன்ற விபரீத செயலில் ஈடுபட வேண்டுமா என்று தங்களது ஆதங்கத்தை நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.