விமானப்படை நிலத்தை விற்ற தாய் மகன் pt
இந்தியா

1997-ல் போலி ஆவணம் மூலம் இந்திய விமானப்படை நிலம் விற்பனை.. தாய்-மகன் மீது குற்றச்சாட்டு!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நிலத்தை தாயும்-மகனும் போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

PT WEB

பஞ்சாப் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த நிலம் 1962, 1965, 1971 போர்களில் ஓடுதளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1997இல் போலி ஆவணங்கள் மூலம் இந்த நிலம் விற்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அதிகாரி நிஷான் சிங் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மோசடியில் சில பஞ்சாப் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நீதிபதி உத்தரவு..

நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே உஷா அன்சால், நவீன் சந்த் ஆகியோர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் நிலம் விமானப்படைக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலம் மே 2025-ல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. உஷா அன்சால், நவீன் சந்த் மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.