இந்தியா

வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது

webteam

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றிச் செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக பாரதிய ஜனதா தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்திற்கு வாஜ்பாய் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.   இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தலில் அடைந்த பிறகு வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.