மார்ச் 7ஆம் தேதி காலைத் தலைப்புச் செய்திகள் web
இந்தியா

HEADLINES| நேபாள நாட்டின் பிரதமராகும் பிரபல ராப் பாடகர் to போர் எதிரொலியாக சிலிண்டர் விலை உயர்வு!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது நேபாள நாட்டின் பிரதமராகும் பிரபல ராப் பாடகர் முதல் போர் எதிரொலியாக உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை வரை விவரிக்கிறது..

PT WEB

தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை..

தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிந்த தங்கம் விலை... சென்னையில் 5 நாட்களில் சவரனுக்கு 6ஆயிரத்து 520 ரூபாய் சரிவு..

நேற்று முன்தினம் மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்தது... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கு விற்பனை...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

2030ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் கலைஞர் கனவு இல்லங்கள் கட்டித்தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும் உறுதி..

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏ.ஐ. ஆய்வகம் அமைக்கப்படும்.. மாடல் பள்ளிகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி..

தங்கம் விலை

தொழில் துறையில் 18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்... ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

3 கோடி லிட்டராக பால் உற்பத்தி, 2030ஆம் ஆண்டுக்குள் நான்கரை கோடி லிட்டராக உயர்த்தப்படும்... உள்நாட்டு மீன் உற்பத்தி 2.67 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

3 கோடி லிட்டராக பால் உற்பத்தி, 2030ஆம் ஆண்டுக்குள் நான்கரை கோடி லிட்டராக உயர்த்தப்படும்... உள்நாட்டு மீன் உற்பத்தி 2.67 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

உத்தமர் காந்தி மாதிரி கிராமத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு... ஊராட்சிகளில் கிராம சந்தைகள் உருவாக்கப்படும் என்றும் உறுதி...

திராவிட மாடல் 2.0வுக்கான ட்ரெய்லரே, கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி என முதல்வர் ஸ்டாலின் பேச்சு... மீண்டும் வெல்வோம், மீண்டும் மீண்டும் வெல்வோம் என்றும் சூளுரை....

கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோரிக்கைக்கு இணங்க வைரல் ஆக்ஷன் செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்... முதல்வரின் SIGNATURE STYLEஆல் அரங்கத்தில் பெருக்கெடுத்த உற்சாகம்....

முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு... பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் ப.சுவாமிநாதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பு...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ராமதாஸின் ஆதரவாளர் சுவாமிநாதன் தாக்கப்பட்டதாக புகார்... அன்புமணியின் தூண்டுதலால் தாக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகத்தில் மனு...

சென்னையில் பாஜக மாநில தேர்தல் மேலாண்மை குழு கூட்டம்... சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை....

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்... தனிச்சின்னம், கூடுதல் தொகுதிகளில் போட்டி உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கமல்ஹாசன் பேட்டி...

மீண்டும் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... அமைப்புச் செயலராக நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி....

சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக விருப்பமனு விநியோகம் நிறைவு... போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட விருப்பமனு பெற்றார் ரவீந்திரநாத்...

மநீம கமல்ஹாசன்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தகவல்... மொத்தம் 30 தொகுதிகள் உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் தலா 18 தொகுதிகளை கேட்பதால் குழப்பம்...

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை... கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் திட்டவட்டம்...

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி... திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு.....

தமிழகத்தில் நிலவும் போதைப் பொருள் கலாச்சாரத்துக்கு பிரதமரும் பாஜகவும்தான் காரணம்... தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு...

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தவெக சார்பில் மகளிர் தின விழா.... சட்டமன்றத் தேர்தலையொட்டி மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் விஜய்....

தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது... வரும் சட்டமன்ற தேர்தலில் 2ஆவது இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து....

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்தை பிடிக்கும்... தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சி சந்திக்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும் என்றும் ஜோதிமணி விமர்சனம்...

ஜோதிமணி

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி அமோக வெற்றி... நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் பிரபல ராப் பாடகர் பலேந்திர ஷா...

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பு... 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முதல்வர் சித்தராமையா அறிவிப்பு...

ஒரு வாரத்தைக் கடந்து நீடிக்கும் இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல்... ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் தொடரும் பதற்றம்...

நிபந்தனையற்ற சரணடைதலை தவிர ஈரானுக்கு வேறு எந்த வழியும் இல்லை... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்...

ஈரான் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டது எப்படி?... தாக்குதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்...

ஈரானுக்கு எதிரான போரால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் அமெரிக்கா.... ஒவ்வொரு நாளும் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல்...

ஈரானுடன் போர் தொடர்ந்தால், வாரத்துக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்... அரசின் பட்ஜெட் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் இஸ்ரேல் நிதியமைச்சகம் எச்சரிக்கை...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

உலக பிரச்சினையாகும் அமெரிக்கா- ஈரான் போர்... விரிவடையும் போரினால், பாதிப்பை சந்திக்கும் 16 நாடுகள்...

துபாயில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக 80க்கும் அதிகமான நாடுகளுக்கு விமானங்கள் இயக்கம்... கடந்த 4 நாட்களில் ஆயிரத்து 140க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டதாக தகவல்...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்...ஹோர்மூஸ் நீரிணை வழியாககப்பல்கள் செல்ல முடியாத சூழலில், ஒருமாதத்துக்கு தடையை நீக்கியதுஅமெரிக்கா...

நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிப்பதா?... பிரதமர் மோடியின் மௌனம் வெட்கக்கேடானது என ராகுல் காந்தி கடும் விமர்சனம்....

நமது எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவையா?... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி...

கொச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் IRIS Lavan போர்க்கப்பல்... IRIS Dena போர்க்கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல்...

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்பு...

ஈரான் மீது தாக்குதல்

ஈரான் போரினால், தாயகம் திரும்ப முடியாமல் வளைகுடா நாடுகளில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்... விரைந்து மீட்கக்கோரி ராஜாக்கமங்கலம் துறையில் உறவினர்கள், மீனவப் பெண்கள் ஆர்ப்பாட்டம்...

IAS, IPS, IFS உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு... மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 2ஆம் இடம்...

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது... அகில இந்திய அளவில் 2ஆம் இடம் பிடித்த ராஜேஸ்வரி, புதிய தலைமுறைக்கு பேட்டி...

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்பு... மக்கள் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

காரணம் இல்லாமல் வழக்குகளை தள்ளிவைக்குமாறு வாய்தா கேட்கக்கூடாது... வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி வேண்டுகோள்...

தமிழகத்தில் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி ஜூலை 17ஆம் தேதி தொடக்கம்.. ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிப்பு..

மக்கள் தொகை கணக்கெடுப்புப் படிவத்திலுள்ள கேள்விகளின் விவரம் வெளியீடு.. வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள், உணவு குறித்தும் கேள்விகள்..

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்பு

சென்னை - ஹைதராபாத் உள்ளிட்டமூன்று ரயில் வழித் தடங்களுக்கு 50ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... பெங்களூரு, புனேவுக்கும்ஹைதராபாதில் இருந்து ரயில்வழித்தடங்கள் அமைக்கப்படும் எனமத்திய அமைச்சர் கிரஷன் ரெட்டிஅறிவிப்பு...

தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த 3 திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்.. சென்னையிலிருந்து கடலூருக்கு மாமல்லபுரம் வழியாக ரயில் பாதை அமைக்க அனுமதி..

திருவண்ணாமலை - திண்டிவனம் இடையே செஞ்சி வழியாக 3ஆயிரத்து 631 கோடி ரூபாய் செலவில் அமைகிறது புதிய ரயில் வழித்தடம்.. அத்திப்பட்டு - புத்தூர் இடையே 88 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே பாதை அமைக்கவும் ஆயத்தம்..

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 30 கோடி ரூபாய் செலவில் அரசு தலைமை மருத்துவமனை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்...

கூடலூர் அருகே தமிழக பகுதிக்குள் கேரள அரசு அறிவிப்பு பலகை வைத்ததற்கு எதிர்ப்பு.... சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது....

கூடலூரில் தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்பு பலகை வைத்து கேரளா எல்லை மீறுவதாக சீமான் குற்றச்சாட்டு...நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசுவேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானதுஎனவும் விமர்சனம்...

சென்னை மத்தியகைலாஷில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு... சீரற்ற முறையில் சிமென்ட் சாலை இருந்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை...

சென்னை மத்திய கைலாஷ் மேம்பாலம் கட்டப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்... ஊழலை தார் பூசி மறைக்க முடியாது, தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் எனவும் அன்புமணி அறிக்கை..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அதிர்ச்சி.. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

நாங்குநேரியில் வடமாநில தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்கக் கோரிய மனு... உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயார்... உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உறுதி...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காதது ஏன்?... விசாரணையின்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கேள்வி...

சென்னையில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது..

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.928.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2.043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா... கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனீஸ்வரர் இடம்பெயர்ந்த நிலையில் திரளான பக்தர்கள் வழிபாடு...

அமெரிக்கா- ஈரான் போர் எதிரொலியாக, நாமக்கல்லில் சுமார் 6 கோடி முட்டைகள் தேக்கம்... உள்நாட்டு விற்பனையை அதிகரித்து, இழப்பைச் சமாளிப்பதற்கு கோழிப் பண்ணையாளர்கள் நடவடிக்கை...

மேகதாது அணை திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசு முடிவு... அறிக்கையை விரைவாகத் தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதல் பெற விரைவில் முன்மொழிவு தாக்கல்...

கேரளாவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் களரி பயிற்சி மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி... சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் கோப்புகளில் புதிய தகவல்... அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று வெள்ளை மாளிகை விளக்கம்...

ட்ரம்ப்

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 30 ஆயிரம் பணி நீக்கம் செய்ய ஆரக்கிள் நிறுவனம் திட்டம்... அதிக செலவுகளை குறைக்கும் வகையில் நடவடிக்கை...

MLS கால்பந்து கோப்பையை வென்ற இண்டர்மயாமி அணி வீரர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டிய அதிபர் ட்ரம்ப்... எக்காலத்துக்குமான தலைசிறந்த வீரர் மெஸ்ஸி என புகழாரம்...