ஈரானின் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய படைகள்.. இஸ்ரேலின் தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்..
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுத்தாக்குதலில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் நீடிக்கும் சிக்கல்..
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த ஈரான் உச்ச தலைவர் காமேனியின் மனைவியும் உயிரிழப்பு.. சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தகவல்..
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்... அமெரிக்க படை தளங்கள், குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதலால் தொடரும் பதற்றம்...
அமெரிக்க ஆதரவு நாடுகளிலுள்ள எண்ணெய் ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஈரான்.. சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலால் பதற்றம்....
இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் தாக்குதல்... ஜெருசலேம், டெல் அவிவ், பீர்ஷிபா உள்ளிட்ட நகரங்களில் சைரன் ஒலி எழுப்பி மக்களுக்கு எச்சரிக்கை...
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு.. பிரதமர் அலுவலகம் தாக்கப்படவில்லை என மறுப்பு தெரிவித்த இஸ்ரேல்..
ஈரான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ.. அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக பேட்டி...
லெபனானின் முக்கிய நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும்மக்கள்... இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பாதுகாப்பான இடங்களை நோக்கி படையெடுப்பு...
ஈரானுக்கு எதிரான தாக்குதல் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு... சக்திவாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் எச்சரிக்கை...
அணுசக்தி திட்டங்களை கைவிட மறுத்ததால் ஈரான் மீது தாக்குதல்... அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம்...
குவைத்தில் அமெரிக்காவின் மூன்று எப்- 15 விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம்... தவறுதலாக சுடப்பட்டதாக குவைத் விமானப்படை விளக்கம்...
வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.. ஈரான் தாக்குதல் நடத்தும் நிலையில், சவுதி, பஹ்ரைன் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுகோள்..
ஈரானின் இறையாண்மையைக் காக்க துணை நிற்பதாக சீனா அறிவிப்பு... இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நிலைப்பாட்டை அறிவித்தது சீனா...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன்... வளைகுடா நாடுகளில் உள்ள தங்களது ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி...
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்... கப்பலில் பணியாற்றிய இந்தியர் உயிரிழப்பு....
வளைகுடா நாடுகள் மீதான ஈரான் தாக்குதல் எதிரொலி... இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தார் எரிசக்தி நிறுவனம்...
போர் பதற்றம் காரணமாக 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை... ஒரு பீப்பாய் விலை 82 புள்ளி 37 டாலருக்கு வர்த்தகம்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து நிறுத்தம்... மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்...
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்... வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஜவுளி தேக்கம்...
மேற்காசிய போர் பதற்றம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 6.8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு...
இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில்காத்திருக்கும் வாகனங்கள்... மேற்காசியப் போர் பதற்றத்தால்எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனஅச்சம்...
வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பரிதவிக்கும் பயணிகள்... 2 நாட்கள் விமான நிலையத்திலேயே தங்கியிருப்பதாக வேதனை...
துபாய் விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு விமான சேவை தொடக்கம்... 3 நாட்களுக்கு பிறகு கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவுக்கு வந்தடைந்த பயணிகள்...
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் திரும்பிய 217 பயணிகள்... 3 நாட்களாக துபாய் விமான நிலையத்தில் தவித்த நிலையில், தாயகம் திரும்பினர்...
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து இன்று முதல் மீண்டும் விமான சேவை... ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு...
தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு தயக்கம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு... தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வது குறித்து இருவரும் ஆலோசனை என தகவல்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தாமதம் ஆவது ஏன்?.. பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்..
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் வேண்டுமா... வேண்டாமா? செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்க திமுக கெடு விதித்துள்ளதாக தகவல்....
திமுகவுடன் பேரம் பேசும் கட்சி விசிக அல்ல என திருமாவளவன் பேட்டி... தங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பதில்...
என்னிடமும் என் தந்தை இடமும் பயமில்லை என்று திமுகவில் யாரோ ஒருவர் அண்மையில் பேசினார் என்று உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியிருக்கும் உதயநிதி என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் என பிரதமர் எங்களிடம் கூற வேண்டாம், பின்னே திரும்பி உள்ள கூட்டத்திடம் சொன்னால் போதும் என்று பேசியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே இரட்டைக் கொலை... சாலையில் சென்றவர்களை அரிவாளால் வெட்டி, 5 பேர் கும்பல் வெறியாட்டம்...ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது... நீல விளிம்புடன் வானில் தோன்றுகிறது சிவப்பு நிலா...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பு... அனைத்து தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு...
சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரு சவரன் ஒரு லட்சத்து 25ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை...
வெள்ளி விலை கிலோவுக்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்தது... ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 15ஆயிரத்திற்கு விற்பனை...
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொது மன்னிப்பு கோரினார்மதுரை ஆட்சியர்... நீதிமன்ற உத்தரவுக்கு வேண்டுமென்றே கீழ்படியாமல் இருக்க நினைக்கவில்லை என்றும் நேரில் ஆஜராகி விளக்கம்....
கனடாவிடமிருந்து யுரேனியம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து... பிரதமர் மோடியை கனடா பிரதமர்மார்க் கார்னி டெல்லியில் சந்தித்தநிலையில் ஒப்பந்தம்...
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது... நீல விளிம்புடன் வானில் தோன்றுகிறது சிவப்பு நிலா...
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்... கிரிவலம் சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு...
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கர’ திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியீடு... போஸ்டர் வெளியிட்டு படக்குழு தகவல்...