திருச்சியில் இன்று நடைபெறும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்...
என்டிஏ கூட்டணி வலுப்பெறுவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது... திருச்சியில் நடைபெறவுள்ள என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி பதிவு...
சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்கிறது மதுரை விமான நிலையம்... பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
திமுக - மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி... திமுக ஒதுக்க முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என பெ.சண்முகம் பேட்டி...
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்.... வரும் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு....
தவெகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணலை தொடங்கிய விஜய்... முதல்கட்டமாக 60 பேரிடம் நேர்காணல் நடத்திய நிலையில், அனைவரையும் வேட்பாளராக தேர்வு செய்ததாக தகவல்...
தவெகவுக்கு ஆதரவளித்துவந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு... ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து ஆதரவுக் கடிதம் அளித்தார் தமீம்...
தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, டீயும் காபியும் கலக்காது என அண்ணாமலை பதில்.. அதிமுக தலைமையிலான கூட்டணிவலிமையாக உள்ளதாகவும் விளக்கம்..
தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் சசிகலா... கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்....
பாரிவேந்தரின் ஐஜேகேவுக்கு மைக் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகேவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..
தமிழ்நாட்டு மக்களுடனான 54 மாத கால பயணம் தனது வாழ்வின் பொற்காலம் என ஆர்.என்.ரவி. நெகிழ்ச்சி... தமிழக மக்களின் அன்புக்கு தலைவணங்கி விடைபெறுகிறேன் என்றும் உருக்கம்...
நம் வீட்டு சமையலறையிலும் எதிரொலிக்க தொடங்கிய மேற்காசிய போர்... கச்சா எண்ணெய்யை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் சிக்கல்...
எரிபொருள் தட்டுப்பாட்டால் பெருநகர உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைப்பு... மின்சார அடுப்புகளுக்கு மாற முடியாத சிறிய உணவகங்கள், கடையை மூடும் சூழல்....
சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது... சப்பாத்தி, தோசை, குருமா, சாம்பார் இல்லை எனவும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...
சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதால் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாநகராட்சி உறுதி... ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களை நாடும் மக்கள்...
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை கேன்டீன்களில் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்... விறகு, மின்சார அடுப்புகளை தயாராக வைத்திருக்க மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்...
திருவண்ணாமலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி... எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் சிரமம் ஏற்படும் நிலை...
சென்னையில் எல்பிஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்... சில எல்பிஜி கேஸ் நிலையங்கள் மூடப்படும் சூழலால், ஆட்டோ சேவை பாதிக்கப்படும் அபாயம்...
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.... சிலிண்டர் இருப்பு, விநியோகம் தொடர்பாக கேட்டறிந்தார்...
சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. தமிழகத்தில் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..
தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை....
உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி அச்சம்... சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்றும் கேள்வி...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய்... தாமே ஒரு சிலிண்டர் டீலர்தான் என நயினார் நாகேந்திரன் பதில்...
20 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பு உள்ளது... தமிழ்நாடு அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் பதில்...
உணவகங்கள் மற்றும் தொழிற்துறையினருக்கான வணிக சிலிண்டர் தட்டுப்பாடு... தட்டுப்பாடு புகார்கள் குறித்தும் வினியோக சிக்கல்கள் குறித்தும் ஆராய 3 எண்ணெய் நிறுவனங்கள் கொண்ட குழுவை அமைத்தது பெட்ரோலிய அமைச்சகம்...
எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு... சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை..
எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவு... சமையல் எரிவாயு, வாகனங்களுக்கான சிஎன்ஜி விநியோகம் 100 சதவீதம் உறுதி செய்யப்படும் என அறிவிப்பு...
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டு பிரச்சினையை மக்களவையில் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி முழக்கம்...
பிரதமர் மோடியுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு... சமையல் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடையும் நிலையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை...
எரிசக்தி போதுமான அளவு இருப்பு உள்ளதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்... இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பதே இல்லை என தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்...
சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் போராட்டம்... சிலிண்டருக்கு பாடை கட்டி சாலையின் நடுவே தூக்கி வந்தவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு...
ஈரான் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு மௌனம் காப்பதாக எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சனம்... முதுகெலும்பும், துணிவும் இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் காட்டம்...
வங்கதேசத்திற்கு 5 ஆயிரம் டன் டீசலை அனுப்பிய இந்தியா... அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சமாளிக்க உதவி...
ஈரானுடனான போர், முடிவை நெருங்கி வருவதாக ட்ரம்ப் தெரிவித்ததன் எதிரொலி... இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வு; கச்சா எண்ணெய் விலை குறைந்தது...
போர் எப்போது முடியும் என்பதை நாங்கள்தான் முடிவெடுப்போம்... ட்ரம்ப்பின் பேச்சிற்கு மறுப்பு தெரிவித்த ஈரானிய சிறப்பு படை....
எங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்கமாட்டோம்... அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்....
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும்... ஈரான் மீண்டும் ஒரு தேசமாக உருவாக முடியாத அளவிற்கு கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் தாக்கம், உலக வர்த்தகம் மற்றும் மேம்பாட்டில் ஆபத்தை விளைவிக்கும்... அன்றாட செலவுகளில் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. எச்சரிக்கை...
லெபனான் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தை குவித்துவரும் இஸ்ரேல்.... ஹிஸ்புல்லா மீதான தாக்குதலால்எல்லையில் பதற்றம்...
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு அருகே தாக்குதல்... 3 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம்...
கடந்த 10 நாட்களில் மட்டும் ஈரானின் 5,000-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தது அமெரிக்கப் படை.... ஈரானின் 50 போர் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க விமானப்படை தளபதி அறிவிப்பு.....
ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரம் பலமடங்கு அதிகரிக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.... இனி ஒரு டன் எடைகொண்ட ஏவுகணைகளை மட்டுமே ஏவுவோம் என வான்வெளிப் படை தளபதி மஜித் மௌசாவி திட்டவட்டம்...
ஈராக்கின் வான்வெளி, நிலப்பரப்பு அல்லது கடல் பகுதியை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.. அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் ஈராக் பிரதமர் சுடானி கண்டனம்....
மேற்காசிய போரினால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருளின் விலை உயர்வு... உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கான பயண கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சி...
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 399 ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்வு... மூன்று கட்டங்களாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அதிரடி அறிவிப்பு...
3 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த இந்திய விமானப் போக்குவரத்துத் துறை... 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் முரளிதர் மொஹோல் தகவல்...
இண்டிகோ விமான நிறுவன சிஇஒ பீட்டர் எல்பர்ஸ் பதவி விலகல்... கடந்த டிசம்பரில் 5,000த்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ராஜினாமா...
இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... மாநிலம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்...
தங்கம் விலை சவரனுக்கு நேற்று முன்தினம் 800 ரூபாய் குறைந்தநிலையில் நேற்று 800 ரூபாய் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் ஒரு லட்சத்து20ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை..
தென் தமிழகம், காவிரி படுகை மாவட்டங்களில் 16ஆம் தேதி வரை மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழா... மலர்களைத் தூவி சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு... MBBS படிப்புக்கு 7இல் இருந்து 13ஆகவும், BDS படிப்புக்கு, ஒன்றில் இருந்து இரண்டாகவும் உயர்வு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம்... சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸார் வலைவீச்சு...
மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப்பின் விடுதலைக்கு எதிரான கேரள அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்பு... விளக்கம் அளிக்குமாறு திலீப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு...
போர் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பாக தாயகம் திரும்பினார் நடிகர் அஜித் குமார்.. கார் பந்தயத்திற்காக துபாய் சென்ற நிலையில், சென்னை வருகை...