வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்... தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்... ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு...
ஜனவரி 10ஆம் தேதி காவிரி படுகை மாவட்டங்களில் மிக கனமழை... சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிப்பு...
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை...
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 2ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை...கிலோ 6 ஆயிரம் ரூபாய் உயர்ந்ததுவெள்ளி விலை....
அதிகரித்த வேகத்தில் குறையும் முட்டை விலை... 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டை 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே... இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு...
பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளதாக தகவல்... தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டம்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்... பிரதமர் மோடியும், ராகுலும் ஒரே நேரத்தில் வரவுள்ளதால் சூடுபிடிக்கும் அரசியல் களம்.
மூன்றாயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு... சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என அமித் ஷா அவதூறு பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு... அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை டெல்லியில் உள்ளவர்கள் ஆள்வார்கள் எனவும் விமர்சனம்...
டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அதிமுக பொதுச் செயலர் கே.பழனிசாமி சந்திப்பு... கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை என தகவல்...
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது உலக அதிசயமா...? முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்ததாக அன்புமணி அறிவிப்பு... தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி...
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்... ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட வாய்ப்பு...
அன்புமணியுடன் கூட்டணி பேச்சு நடத்துவது சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடல்... கட்சி விதிப்படி தன்னுடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடத்த வேண்டும் என அறிக்கை...
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வையாளர்கள் நியமனம்... முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் பெயர்களை அறிவித்த டெல்லி தலைமை...
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வையாளர்கள் நியமனம்... முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் பெயர்களை அறிவித்த டெல்லி தலைமை...
அரசு பணத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குசேகரிக்கும் திட்டம்தான், கனவைச் சொல்லுங்கள் திட்டம்... அரசு திட்டத்தை திமுகவுக்கு தேர்தல் வேலைபார்க்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க முயற்சி என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
மக்களின் கனவைக் கேட்டதற்கே ஏன் எடப்பாடி பழனிசாமி அலறுகிறார் என அமைச்சர் ரகுபதி கேள்வி... அடுத்த முதல்வர் தாம்தான் என்பதைத் தவிர பழனிசாமியின் கனவையும் அரசு நிறைவேற்றித்தர தயார் என்றும் பதிலடி...
ஆளுக்கொரு இயக்கத்தை தொடங்காமல் ஒற்றுமையுடன் செயல்பட்டால், வரும் தேர்தலில் 20 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தலாம்... மதுரையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு...
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... ரயில்வே கிராஸிங்கை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு கிடைத்த தீர்வு...
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாகாது... தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் நிலவி வரும் நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...
யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரைத்திருப்பதாக கூறிய நிலையில் தற்போது மறுப்பதாக ஜனநாயகன் படக்குழு வாதம்... படத்தின் உள்ளடக்கம் குறித்து புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்புகிறோம் என தணிக்கைக் குழு பதில்...
மதுரையில் அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை வருவாய்த் துறையினரே நடத்த ஆணை... ஜல்லிக்கட்டு, ஐபிஎல் மேட்ச் அல்ல என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பற்றிய புத்தகத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும் என தலைமை நீதிபதி கேள்வி....
போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அரசு உத்தரவு... ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் நடவடிக்கை...
தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு... கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் உயிர் இல்லையா? என கேள்வி...
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் 6 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் உத்தர பிரதேசம், தமிழ்நாடு,குஜராத்துக்கு முதல் 3 இடம்...
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அம்பர்நாத் மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக... கட்சித் தலைமை ஒப்புதலின்றி நடந்ததாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஃபட்னவிஸ் விளக்கம்...
அம்பர்நாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெல்ல உதவிய 12 கவுன்சிலர்கள் இடைநீக்கம்... சர்ச்சை வலுத்த நிலையில் மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைமை நடவடிக்கை...
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா படைகள்... வெனிசுலாவில் இருந்து தடையை மீறி எண்ணெய் ஏற்றிச் சென்றதாக புகார்...
அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் விநியோகம் செய்த வெனிசுலா... அதிபர் மதுரோ கைதான நிலையில், இடைக்கால அரசு வழங்கியதாக ட்ரம்ப் இணையத்தில் பதிவு...
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான யு19 ஒருநாள் போட்டியில் 63 பந்தில் சதமடித்து அசத்தினார் 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, யுஏஇ மண்ணில் சதமடித்திருந்த வைபவ் சூர்யவன்ஷி தென்னாப்பிரிக்கா மண்ணிலும் சதமடித்து அசத்தல்.. தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்..