Droupadi Murmu, u19 india x page
இந்தியா

Headlines | இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் இந்திய அணியின் வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் இந்திய அணியின் வெற்றி வரை விவரிக்கிறது

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் இந்திய அணியின் வெற்றி வரை விவரிக்கிறது

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிப்ரவரி 2ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்... வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கும் என வானிலை மையம் கணிப்பு...

  • 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் பல்வேறு துறைகளில் இந்தியா தடையற்ற ஒப்பந்தம்.... அதிக வரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியனுடன் கை கோத்த இந்தியா

  • இந்தியாவிலேயே முதல்முறையாக சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி... முன்னோடி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்....

  • குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்... வரும் ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

  • எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் ஒருகோடி வாக்காளர்களை நீக்கியிருப்பது வாக்குரிமைக்கான அச்சுறுத்தல் - கமல்ஹாசன் வேதனை

கமல்ஹாசன்
  • திருச்சியை 2ஆம் தலைநகரமாக்கும் வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா?... கனிமொழியிடம் கோரிக்கை மனு அளித்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்...

  • திமுக உடன் கூட்டணியை உறுதிசெய்யும் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை - காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி

  • விருதுநகர் மாவட்டத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் - தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா அறிவிப்பு...

  • காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு... சாலைகளால் போக்குவரத்து முடக்கம்...

  • யு19 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் சிக்ஸ் பிரிவில், இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.