இன்று கையெழுத்தாகிறது இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்... வரிகள் குறைக்கப்படுவதால் ஜவுளி உள்ளிட்ட இந்திய தொழில் துறைகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தயாராகி வரும் மத்திய அரசு... முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு...
டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அரசமைப்பு நடைமுறைக்கு வந்த தினம்... கடமைப்பாதையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மரியாதை...
டெல்லி குடியரசுத் தின விழாவில் முப்படைகளின் வலிமையை பறைசாற்றிய அணிவகுப்பு... அதிநவீன ராணுவ தளவாடங்கள், இந்திய தயாரிப்புகளை கண்டு வியந்த பார்வையாளர்கள்...
தலைநகரில் சுயசார்பு இந்தியாவை எதிரொலித்த தமிழ்நாட்டின் ஊர்தி... மயிலாட்டம், சிலம்பத்துடன் ஏறுதழுவி பார்வையாளர்களின் மனம் கவர்ந்த தமிழ்நாடு...
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவிற்கு அசோக சக்ரா விருது... குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்...
குடியரசு தின நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு மூன்றாவது வரிசையில் இடம்... எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான மரியாதை வழங்கப்படவில்லை எனபலரும் விமர்சனம்...
குடியரசு தினத்தையொட்டி அட்டாரி- வாகா எல்லையில் பிரம்மாண்டமாக நடந்த கொடியிறக்கும் நிகழ்ச்சி... முறுக்கு மீசையுடன் வீர நடையுடன் மெய்சிலிர்க்கும் சாகசத்தில் ஈடுபட்ட வீரர்களை கண்டுரசித்த பொதுமக்கள்...
தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடி அவதூறு பரப்புவதாக தஞ்சை திமுக மகளிர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு... நாட்டிலேயே பெண்களுக்குபாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுஎனவும் பேச்சு...
வரும் தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான மோதல்... ஜனநாயகப் போரில் வெற்றி பெறும் வரை ஓய்வில்லை என்றும் ஸ்டாலின் பேச்சு...
மைக் என்றெண்ணி கண்ணாடி முன் நின்று பிரதமர் மோடி பேசுவதாக துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்... குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கேடுகெட்ட கட்சி என பாஜக மீது கடும் தாக்குதல்...
பாஜகவின் மாடல், டபுள் இன்ஜின் அல்ல; மக்கர் இன்ஜின்... குஜராத்தை தமிழகத்தோடு ஒப்பிட்டு திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி விமர்சனம்...
காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய திமுக எம்எல்ஏ தளபதிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்... தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் எம்பி கருத்து...
குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்... அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு...
ஆளுநர் அளித்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் நீண்ட நேரம் உரையாடிய நயினார் நாகேந்திரன், எல்.கே.சுதீஷ்... அரசியல் பேசவில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டி...
தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கும் அதிமுக, பாஜக தலைவர்கள்... பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப்போகிறாரா என டிடிவி தினகரன் சாடல்...
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கு... தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய திமுக மூத்த அமைச்சர்கள்... திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க முடிவு செய்திருந்த நிலையில் கவனம் பெற்ற சந்திப்பு...
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தகவல்... மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகள், தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமெனவும் கணிப்பு...
தொடர் மழையால் திருவாரூர், புதுக்கோட்டையில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... ஆய்வுகளை மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை...
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் தொடரும் அமெரிக்க அரசின் கெடுபிடி... வழக்கத்தைவிட 221ஜி நோட்டீஸ் அதிகளவில் அனுப்பப்படுவதால் இந்தியர்கள் கவலை...
பனிப்புயலால் முடங்கிய வட அமெரிக்க நாடுகள்... சாலைகள், குடியிருப்புகள் என காணும் இடமெல்லாம் குவிந்துள்ள பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானை மிரட்டும் பனிப்புயல்... கடும் பனிப்பொழிவால் விமானம், ரயில் சேவைகள் ரத்து...
காஸாவில் விரைவில் இரண்டாம் கட்ட அமைதி ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்த இஸ்ரேல் திட்டம்... பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ரஃபா எல்லையை மீண்டும் திறக்கவும் ஒப்புதல்...
நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து திலக் வர்மா விலகல்... மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிப்பு...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முதல்நிலை வீரர் சின்னர் முன்னேற்றம்... நான்காவது சுற்றில் சகவீரர் வெளியேறியதால், நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிச்...
ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை பெகுலா... இகா ஸ்வியாடெக், எலினா ரைபாகினா உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு தகுதி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டாட் பிராட்மேனின் தொப்பியை ரூ.4.2 கோடிக்கு லாயிட்ஸ் ஏலத்தில் விற்றுள்ளது இந்திய வீரர் சோஹோனியின் குடும்பம்
75 ஆண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பரிசாக கொடுத்திருந்தார் டான் பிராட்மேன்