ஜனவரி 20 காலைத் தலைப்புச் செய்திகள் web
இந்தியா

HEADLINES| கில் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின் To கேரளா நபர் மரணத்தில் மனித உரிமை ஆணையம் உத்தரவு!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, சுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின் முதல் கேரளா நபர் மரணத்தில் மனித உரிமை ஆணையம் உத்தரவு வரை விவரிக்கிறது..

PT WEB

டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை... இருநாடுகள் இடையே பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து...

பேசுபொருளாக மாறிய ஐக்கிய அரபு அமீரகம் அதிபரின் 2 மணி நேர இந்திய பயணம்... சர்வதேச அளவிலான பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்...

நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்... முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர்உரையுடன் நிகழ்வுகள் தொடங்கும் எனஅறிவிப்பு...

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம்... சென்னையில் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி...

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு... வரும் 30ஆம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

வாக்காளர் பட்டியல்

திருப்போரூர் அருகே சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆறாவது நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்... திமுக ஆட்சிக் காலங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக பெருமிதம்...

மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிட எதிர்க்கட்சித் தலைவர்கள், சூழலியல் அமைப்புகள் வலியுறுத்தல்... மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நீர்வளத் துறை விளக்கம்...

3 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்... தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதிச் செய்யும் முனைப்பில் பல்வேறு கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை...

அதிமுக - பாஜக இடையே நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்... 23ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக பங்கேற்க ஏற்பாடு...

தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய 2ஆம் கட்ட விசாரணை நிறைவு... கரூர் துயரம் தொடர்பாக ஐந்தரை மணிநேரம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள்...

தவெக தலைவர் விஜய்

மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி விஜய்க்கு சம்மன் அளிக்கப்படவில்லை... தவெக நிர்வாகி நிர்மல்குமார் பேட்டி...

ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை... படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா அமர்வில் விசாரணை...

தீ பரவட்டும் என்றால் இன்றும் சிலர் பயந்து நடுங்குகின்றனர்... சென்னை புத்தக காட்சியில் பபாசி விருதுகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி உரை...

கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில், பலூனில் காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்து விபத்து... பெண் உயிரிழப்பு... 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

கடலூர் மஞ்சகுப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்... பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வழிபாடு...

சென்னை டிபிஐ அலுவலகம் அருகே 12ஆவது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்... பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் கைது...

கேரளாவில் பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தற்கொலை செய்துகொண்ட தீபக் விவகாரம் குறித்து டிஐஜி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்... நாளை வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கணிப்பு...

நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு தொடரும் உறைபனி எச்சரிக்கை... 2 நாட்களுக்கு இரவு அல்லது அதிகாலைவேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு...

பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வானார் நிதின் நபீன்... செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார் என தகவல்...

காங்கிரஸ் ஆட்சிக்கும் வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தின் பழைய நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்... காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உறுதி...

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் தொடங்கியது... 5 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிலிருந்து இந்தியாவின் 6 மாநில முதல்வர்கள் வரை பங்கேற்பு...

எந்த அழுத்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை என கிரீன்லாந்து பிரதமர் ஃபிரடெரிக் நீல்சன்((FREDERICK NIELSEN)) உறுதி... கிரீன்லாந்தை வசப்படுத்த நேரம் வந்துவிட்டதாக ட்ரம்ப் பேசியிருந்த நிலையில் பதிலடி...

கிரீன்லாந்து விவகாரத்தை 2 மாதத்தில் பேசி முடிக்க போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... ஈரான் உயர் தலைவர் காமேனியை தூக்கிலிடுவது போல சித்தரித்து ஊர்வலம்...

தென் அமெரிக்க நாடான சிலியில் கட்டுக்கு அடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயால் அவசர நிலை பிரகடனம்... 19 பேர் உயிரிழந்த நிலையில், தீ மேலும் பரவாமல் இருக்க அணைக்கும் முயற்சி மும்முரம்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி... முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்...

சுப்மன் கில் பவுலர்களை சரியான நேரத்தில் பயன்படுத்திவதில் கோட்டைவிடுவதாக அஸ்வின் விமர்சித்துள்ளார். தோனி, ரோகித் போன்ற கேப்டன்கள் அதை செய்ததால் தான் புகழ்பெற்றனர் என்றும், வெள்ளைபந்து கேப்டன்சி செய்வது அவ்வளவு எளிதானதல்ல என்றும், கில் 2வது போட்டியிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என விமர்சித்துள்ளார்.