சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி... பிரதமரின் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்...
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார் பிரதமர் மோடி .. பரமக்குடி - ராமநாதபுரம், மரக்காணம் -புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு அடிக்கல்நாட்டுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம்... மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு...
இன்று தொடங்குகிறது திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை... கூட்டணி சிக்கல் முடிவுக்கு வந்ததால் டெல்லிக்கு பச்சைக்கொடி காட்டிய அறிவாலயம்...
காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு குறித்து திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் கூறுவோம்.. சென்னை வந்தடைந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேட்டி..
தேர்தல் நேரம் என்பதால் பலர் சந்திப்பார்கள், பேசுவார்கள்.... தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் கிரிஷ் சோடங்கர் பதில்...
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதது ஏன்?... தேர்தல் நேர பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டிற்கு மோடி அரசு நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு....
வாக்குக்காக ஜெயலலிதா மீது பிரதமர் மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்... மோடியா? லேடியா? என விடுத்த சவால் மறந்துவிட்டதா என்றும் பிரதமருக்கு கேள்வி...
வழக்குகளில் இருந்து தப்பிக்க சுயநலத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் பழனிசாமி... சந்தர்ப்பவாத கூட்டணி சர்க்கஸ் கூடாரம் போல கலையும் என மு.க. ஸ்டாலின் விமர்சனம்.....
கெஜ்ரிவாலை பொய் வழக்கில் சிறையில் அடைத்து கோழைத்தனமாக பாஜக தேர்தலை எதிர்கொண்டதாக முதல்வர் ஸ்டாலின் சாடல்... டெல்லி ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய பாஜக முயற்சி என்றும் குற்றச்சாட்டு...
திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்... ஆரத்தழுவி வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்... எம்.எல்.ஏ. ஐயப்பன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் ஐக்கியம்.
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் நடத்தும் திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன்... சட்டமன்றத்தில் தாயுள்ளத்துடன் அனைத்து கட்சியினரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்வதாகவும் பன்னீர்செல்வம் பாராட்டு...
முதல்வர் மு.க.ஸ்டாலினை தளபதி என அழைத்த பன்னீர்செல்வம்... திமுக ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் பேட்டி...
அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரி என ஓ.பன்னீர்செல்வம் காட்டம்.... இனி எந்தக் காலத்திலும் பழனிசாமி வெல்ல முடியாது என்றும் பேட்டி...
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர் ஓ.பன்னீர்செல்வம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு... தாய்க்கழகத்திற்கு வரவேற்பதாகவும் மகிழ்ச்சி...தேர்தல் நேரத்தில் முகாம் மாறுவது புதிதல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்... அதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள்தான் முகாம் மாறுவதாகவும் கருத்து....
அண்ணா அறிவாலயத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்ற தங்க தமிழ்ச்செல்வன்... எதிர்எதிர் துருவங்களாக இருந்தவர்களை ஒன்றிணைத்த மு.க. ஸ்டாலின்....
திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்... ஆதரவாளரும், உசிலம்பட்டிஎம்எல்ஏவுமான ஐயப்பனும் ராஜிநாமாகடிதத்தை வழங்கினார்...
திமுகவின் துணை பொதுச் செயலர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைக்க வாய்ப்பு... பன்னீர்செல்வம் உட்பட மூவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்கலாம் என்றும் தகவல்...
திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை கொண்டாடிய ஆதரவாளர்கள்... அவரது சொந்த தொகுதியான போடியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகம்...
நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?.... திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக கடும் விமர்சனம்...
தேர்தல் நேரத்தில் முகாம் மாறுவது புதிதல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்... அதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள்தான் முகாம் மாறுவதாகவும் கருத்து....
ஜெயலலிதாவை மறந்து சுயநலமே வாழ்க்கையாக கொண்டுள்ளார் பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம்... திமுகவுடன் சதி திட்டம் தீட்டியவர் பன்னீர்செல்வம் என்று சி.வி. சண்முகமும் தாக்கு...
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது என சசிகலா கருத்து... தீய சக்தி திமுகவை தாய்க் கழகமாக நினைத்து இணைந்தது தவறு என்றும் பதிவு...
பாஜக சொல்படி நடக்கிறார் என்று கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தது வரவேற்கத்தக்கது... ஓ.பன்னீர்செல்வம் வருகையால் மதச்சார்பற்ற கூட்டணி மேலும் பலம் பெறும் என்றும் திருமாவளவன் கருத்து...
அதிமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் ... ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது புரியாத புதிர் என்று புதிய தலைமுறைக்கு பேட்டி...
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை... மார்ச் 2ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக...
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க புதிய யுக்தி... தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி...
வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப்படங்கள் இடம்பெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு... தபால் வாக்குகள் 2 கட்டமாக எண்ணப்படும் என்றும் பேட்டி..
சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமலாக்கத் துறையின் தலைமை இயக்குநர்.... அமைச்சர் கே.என்.நேரு மீதான புகார் குறித்து அமலாக்கத் துறை விசாரித்துவரும் நிலையில் முக்கிய ஆலோசனை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம்.... திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது...
வெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடுகிறது அறிவாலயம்... கிருஷ்ணகிரியில் திமுக இளைஞரணி நிர்வாகி போக்சோவில் கைதானதை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் விமர்சனம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த 12 பேரின் பிணை ரத்து... மார்ச் 6ஆம் தேதி 12 பேரும் சரணடையுமாறு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் புகார் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்... ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவாலை 156 நாட்களும், சிசோடியாவை 534 நாட்களும்சிறையில் வைத்ததாக சிபிஐக்குகண்டனம்...
சிபிஐ வழக்கில் இருந்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட 23 பேரும் விடுவிப்பு... மதுபானக் கொள்கையில் எந்தவிதமான சதித்திட்டமோ, குற்றவியல் நோக்கமோ இல்லை என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு...
சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் கதறி அழுத டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்... கடவுள் நம்முடன் இருக்கிறார் என உருக்கம்..
வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்க சிபிஐ முயற்சித்திருக்கிறது... சிபிஐ அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரைப்பதாகவும் டெல்லி நீதிமன்றம் அதிரடி...
மதுபான கொள்கை வழக்கில் சவுத் குரூப் என்ற வார்த்தையை பயன்படுத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்... குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பின்னணியை அடையாளப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என கருத்து...
தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 5ஆம் தேதி வரை மழை... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
தமிழகத்தில் 3ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
சென்னை ரயில் பயணிகளை பாதிக்கும் மற்றொரு அறிவிப்பு... சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் முழுமையாக ரத்து....
சென்னை மெட்ரோ ரயில் 4ஆம் வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு... கலங்கரை விளக்கத்திலிருந்து மயிலாப்பூரை வந்தடைந்தது ஃப்ளெமிங்கோ...
இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்காக சிறப்பு மெட்ரோ ரெயில்... சென்னை விமான நிலையத்திலிருந்து டி. எம்.எஸ் வரை இயக்கப்பட்டது...
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு...
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை.. கடந்த இரண்டு நாட்களில் 240 ரூபாய் குறைந்தது...
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு... முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு...
நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ் சரிவு... 6 மாதங்களுக்கு பிறகு 5 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது முட்டை விலை...
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல்.. கடந்த 2 ஆண்டுகளாக விஜய், தன்னையும் குழந்தைகளையும் பிரிந்து வாழ்ந்து வருவதால் விவாகரத்து கோருவதாக மனு..
ஒடிசாவில் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெற்றி... உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணை இலக்கை துல்லியமாக தகர்ப்பு...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரசண்ட்’ இலகுரக போர் ஹெலிகாப்டரில் பறந்த ஜனாதிபதி திரெளதி முர்மு... 25 நிமிடங்கள் பயணித்து, எல்லையோர வான்பரப்பை ஆய்வு செய்தார்...
இத்தாலின் மிலன் நகரில் ட்ராம் ரயில் தடம்புரண்டு விபத்து... ரயிலில் பயணித்தவர் உட்பட 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு...
காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் மூன்று மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்... ஆப்கான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகளை தாக்கியதையடுத்து பதிலடி..
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 133 ஆப்கான் தாலிபான் போராளிகள் உயிரிழந்ததாக தகவல்... இரு நாடுகளும் “திறந்த போர்” நிலைக்கு சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு...
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் சூழ்ந்துள்ள போர் மேகம்... தற்கொலை படையை தயார் நிலையில் வைத்திருப்பதாக தாலிபான் அறிவிப்பால் பதற்றம்...
ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்த மெட்டா நிறுவனம் நடவடிக்கை... கூகுளுடன் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்...
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி... வரும் 4ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்புக்கு அழைப்பு...
2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..
இன்று நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 13.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டினால் NRR புள்ளிகள் அதிகம்பெற்று அரையிறுதிக்கு தகுதிபெறும்..