pak, rahul gandhi x page
இந்தியா

Headlines | சம்மதம் தெரிவித்த பாக். முதல் கூட்டணி குறித்து ராகுலின் ஆலோசனை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, Headlines | சம்மதம் தெரிவித்த பாக். முதல் கூட்டணி குறித்து ராகுலின் ஆலோசனை வரை விவரிக்கிறது.

Prakash J

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, Headlines | சம்மதம் தெரிவித்த பாக். முதல் கூட்டணி குறித்து ராகுலின் ஆலோசனை வரை விவரிக்கிறது.

  • டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் சம்மதம்... வரும் 15ஆம் தேதி திட்டமிட்டபடி கொழும்புவில் பலப்பரீட்சை...

  • வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று ஐசிசி அறிவிப்பு... டி20 உலக கோப்பை தொடரை புறக்கணித்தாலும் வணிக சந்தையை கருத்தில் கொண்டு நடவடிக்கை ஏதும் இல்லை என அறிக்கை..

  • மார்ச் 15ஆம் தேதி நடைபெறுகிறது குரூப் 2, 2ஏ தேர்வுகள்... நேற்று முன்தினம் குளறுபடி காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

  • சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி... கூட்டணி விவகாரம், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டம்...

  • தங்களிடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணியே பாமகவின் தலைவர்... தேர்தல் ஆணையத்தின் பதிலை பதிவு செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்...

விஜய்
  • தவெக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆலோசனை... தேர்தல் பணிகள், சேலம் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசிக்க திட்டம்...

  • விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கு வாபஸ் ஆகிறது... சென்னை உயர் நீதிமன்றத்தில் கடிதம் அளித்தது படக்குழு...

  • 8 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்... மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தல்...

  • மேற்குவங்கத்தில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கான கால அவகாசத்தை மேலும் ஒருவாரம் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு...

  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்று விறுவிறுப்பான ஆட்டங்கள்... ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகள் அசத்தல் வெற்றி